போலீஸ் ஏட்டு பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்திலுள்ள முத்தங்கா வனப்பகுதியில் எருமாடு போலீஸ் ஏட்டு சிஜூ என்பவர் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து கேரள வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிஜூவை பணி இடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
இதனை அடுத்து வேட்டைக்கு கொண்டு சென்ற துப்பாக்கியை பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்காரக்கொல்லி பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பது வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் முத்தங்கா உதவி வனபாதுகாவலர் சுனில் குமார் தலைமையிலான வனத்துறையினர் தேயிலை தோட்டத்தில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சிஜூவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.