டுவிட்டர் நிர்வாகத்தில் இந்தியரான பராக் அகர்வால் பதவியேற்ற உடனே அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 29-ஆம் தேதி இந்தியாவை சேர்ந்த பராக் அகர்வால் ( வயது 37 ) டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து டுவிட்டர் நிர்வாகத்தில் பராக் அகர்வால் பதவியேற்ற உடனே அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பொது மேலாளர்களாக துணை தலைவர்கள் 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நடவடிக்கையானது வேகம் மற்றும் செயல் திறன்களை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே டுவிட்டரின் பொறியியல் பிரிவு தலைவர் மைக்கேல் மோன்டனோ, வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் டேன்டிலே டேவிஸ் ஆகிய இருவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் டுவிட்டரின் சமூக ஊடக சேவை பிரிவின் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக டுவிட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.