ஒரே நேரத்தில் 5 பாம்புகள் பள்ளிக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழன்குடிக்காடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளனர். அப்போது சுமார் 5 பாம்புகள் ஒன்றாக கழிவறையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியரான வீரமணியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து அந்த பாம்புகளையும் அடித்து கொன்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.