ஜாவத் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது ஒடிசா கரையோரம் நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இதற்கு ஜாவத் புயல் என்று பெயரிடப்பட்ட நிலையில், இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளை நெருங்கியது. இந்த புயல் தற்போது ஒடிசா கரையோரம் நிலைகொண்டுள்ளது. மேலும் இந்த புயல் வலுவிழந்து வடக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கத்தின் கரையை அடுத்த 12 மணி நேரத்தில் நெருங்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.