Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நகைக்கடை அதிபர் வீட்டில் திருட்டு…. வசமாக சிக்கிய குற்றவாளி…. போலீஸ் நடவடிக்கை…!!

நகைக்கடை அதிபரின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சர்ச் ரோட்டில் நகைக்கடை அதிபரான கருப்பண்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 26-ஆம் தேதி முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் கருப்பண்ணன் கழுத்தில் கத்தியை வைத்து 9 கிலோ வெள்ளி பொருட்கள், 103 பவுன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகில் நின்று கொண்டிருந்த கருப்பண்ணனின் காரை தனிப்படை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட செந்தில்குமார், ஆனந்த் மற்றும் வெள்ளி பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த செந்தில்குமாரின் தாய் ராஜேஸ்வரி, மனைவி கவிமஞ்சு ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜ்குமார் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |