ஒரே நேரத்தில் 5 வீடுகள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இங்கு வசிக்கும் பிச்சப்பன், முருகானந்தம், பாண்டி, செல்வம், கலைச்செல்வி ஆகிய 5 பேர் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் பயங்கர சத்தத்துடன் பெட்ரோல் குண்டுகள் வெடித்ததால் இரண்டு வீடுகளில் தீப்பற்றியுள்ளது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டில் பற்றிய தீயை அணைத்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.