”பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் தற்போது ”பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் உள்ளது. சமீபத்தில், ‘பீஸ்ட்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதி இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், வீடியோவாக உருவாக்கப்பட்டு வெளியிட்டுள்ளது.
Enna nanba? First single ah? 😉#BeastFirstSingle 🔥#29YrsOfVIJAYSupremacy @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyan @hegdepooja #Beast pic.twitter.com/tzx40fMFYO
— Vijay Fans Trends (@VijayFC_Updates) December 4, 2021