Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS NZ :ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் ….! மாபெரும் சாதனை படைத்த நியூஸி வீரர் …..!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் 10 விக்கெட் கைப்பற்றிய நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது .இதில் நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் படேல் இந்திய அணியில் 10 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த வீரர்களின் பட்டியலில் 3-வது வீரராக இடம்பிடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக கடந்த 1956-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஜிம் லேக்கர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார் .அடுத்ததாக 1999-ஆம் ஆண்டு இந்திய அணியில் அனில் கும்ப்ளே பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் . இதன்பிறகு இந்தப் பட்டியலில் அஜாஸ் படேல் இணைந்துள்ளார்.

Categories

Tech |