கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள நூற்பாலையில் வடமாநில பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமாநில இளம் பெண்ணை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் ஊழியர் ஒருவர் வேலைக்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார். அதனால் அந்தப் பெண் தங்கியிருந்த விடுதியில் வார்டன் லதா மற்றும் மேலாளர் முத்தையா ஆகியோர் கம்பியால் பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர். அதனால் அந்தப் பெண் கதறியழும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, நூற்பாலை மேலாளர் உட்பட இருவரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படுமா? 😡 https://t.co/1GPi4UC7c4
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 4, 2021