Categories
அரசியல்

கொடி பிடிக்கும் தொண்டர்கள் தேவை…. தடி எடுக்கும் குண்டர்கள் வேண்டாம்…. சசிகலா…!!!!.

அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நம்மை விட்டு சென்றவர்கள் அன்றுமுதல் இன்று வரை நமது நடுவில் செயலை பார்க்கும்போது என் மனது மிகவும் வேதனைப்படுகிறது.

எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும், தொண்டர்களை மதித்து அவர்கள் நலனில் அக்கறை காட்டும் போதுதான் அதைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் அந்த இயக்கத்தின் மீது நல்ல நம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு இயக்கத்திற்கும் கொடி பிடிக்கும் தொண்டர்கள்தான் தேவையே ஒழிய தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல. தொண்டர்கள் மீது ஒவ்வொரு விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது விழும் ஒவ்வொரு அடியும் என்மீது விழுந்த அடியாகவும் தான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |