தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் 24 நாடுகளில் பரவி வருகிறது. அதன்படி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை விதித்துள்ளது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லூரியில் தடவியல் பேராசிரியராக சுஷில் சிங் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரபிரபா, மகன் ஷிகார் சிங் மற்றும் மகள் குஷி சிங். சுசில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து தனது சகோதரருக்கு அவர் வாட்ஸ் அப்பில், “ஒமிக்ரான் மாறுபாட்டில் இருந்து யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்றும் அனைவரையும் விடுவிக்கிறேன்” என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சகோதரர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே திறந்து பார்த்தபோது தனது சகோதரரின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்து கிடந்தன. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் அந்தப் பேராசிரியர் டைரியை கைப்பற்றினார். அதில் “இப்போது இறந்த உடல்களை எண்ணுவது தேவையில்லை என்றும் கொரோனா வைரஸ் அனைவரையும் கொள்ளும்” அவர் எழுதி உள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.