Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு திரும்பிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. புதுக்கோடையில் நடந்த சோகம்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில்  வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மங்களூர் கிராமத்தில் பிச்சைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உறுமையா என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் உறுமையா கந்தர்வகோட்டைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியாருக்குச் சொந்தமான பார்சல் சர்வீஸ் சரக்கு லாரி உறுமையாவின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.

இந்த விபத்தில் உறுமையா தூக்கி வீசப்பட்டு  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விடடார். இது குறித்து தகவலறிந்த கந்தர்வகோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உறுமையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை வலையை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |