இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த வங்கிகளிலிருந்து இருந்து 5 நிதி மற்றும் நிதி அல்லாத இலவச பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மாதந்திர இலவச பரிவர்த்தனை மீறுபவர்களுக்கு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற 2002ஆம் ஆண்டு ஜனவரி முதல் அபதாரம் தொகை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக பரிமாற்ற கட்டணத்தை வங்கிகளுக்கு ஈடுகட்டுவதற்காக மற்றும் பொது செலவுகள் அதிகரிப்பதற்காக வும் ஒரு பரிவர்த்தனைக்கான வாடிக்கையாளர் கட்டணத்தை 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏடிஎம்களை பயன்படுத்துதல் மற்றும் ஏடிஎம் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.