மழைநீர் புகுந்த அனைத்து பகுதிகளையும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் முக்கூடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி முக்கூடல், அமர்நாத் காலனி, சிவகாமிபுரம், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் முக்கூடல் பேரூராட்சி அலுவலர் கந்தசாமி தலைமையில் புதுகாலணி பகுதியில் தேங்கிய மழைநீரை இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் சிவகாமிபுரம், அமர்நாத் காலனி போன்ற இடங்களில் பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தினி, பஞ்சாயத்து தலைவர் ஆனைக்குட்டி போன்றோர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அவர்களிடம் குடியிருப்புகளில் மழைநீர் புகாமல் இருப்பதற்காக நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.