அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற வருகிற 8-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் மற்றும் வேலூர் கோட்டத்தின் மூலமாக அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுக்குமாடிக் கொண்ட குடியிருப்புகள் கட்டிப் பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றது. இத்திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு இம்மாவட்ட எல்லைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகளில் குடியிருந்து வரும் மறு குடியமர்வு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதில் ஒரு குடியிருப்புக்கான செலவு தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை போக மீதமிருக்கும் பங்குத் தொகையான 1,65,000 ரூபாயை பயனாளிகள் செலுத்த வேண்டும் எனவும், அனைவரும் வீடு திட்ட விதிகளின் படி மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வளையாம்பட்டு திட்டப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்கி வாசிக்க விரும்பும் பயனாளிகள் இந்தியாவில் தனது பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் எவரேனும் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை மற்றும் மாத வருமானம் 25,000 இருப்பதற்கான சான்றுதல் அளிக்க வேண்டும்.
இதனை அடுத்து இவற்றுக்கான சிறப்பு முகாம் இம்மாவட்டத்தில் இருக்கும் லாலா ஏரி செல்லும் வழியில் வலையாம்பட்டு திட்டப் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் என்ற முகவரியில் வருகின்ற 8-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இதில் பயனடைய விரும்பும் பயனாளிகள் குடும்ப தலைவர் மற்றும் குடும்ப தலைவி ஆகிய இருவருடைய ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை மேற்கண்ட இடத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.