Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பாட்டு பாடி நடனமாட சொல்றாங்க” மாணவிகள் அளித்த மனு…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

ராக்கிங் செய்து துன்புறுத்துவதாக கூறி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்கர் நகரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் தங்கும் விடுதி அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதலாம் ஆண்டு படிக்கும் 5 மாணவிகள் சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் விடுதியில் தங்கியிருக்கும் 3-ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகள் ராக்கிங் செய்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, கடந்த சில நாட்களாக 3-ஆம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிகள் எங்களை ராக்கிங் செய்கின்றனர்.

நாங்கள் தூங்கும் போது நள்ளிரவு நேரத்தில் கதவை தட்டி பாட்டு பாடு, நடனமாடு எனக் கூறி எங்களை மிகவும் துன்புறுத்துகின்றனர். மேலும் செல்போன் பயன்படுத்தக்கூடாது எனவும், மீறி உபயோகப்படுத்தினால் அதனை உடைத்து விடுவோம் என மிரட்டுகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதுகுறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சரளா விடுதிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

Categories

Tech |