Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆசிரியரை தாக்கிய மாணவன்…. அதிகாரிகளின் தீவிர விசாரணை…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியரான இந்திரா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்த இந்திரா ஒழுங்கீனமாக இருந்த ஒரு மாணவரை கண்டித்துள்ளார். இதனால் மாணவருக்கும் ஆசிரியைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மாணவர் ஆசிரியரின் கன்னத்தில் 2 முறை ஓங்கி அறைந்து அவரை கீழே தள்ளி விட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திரா பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன் பின் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அந்த மாணவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மற்றும் நேரடி பணி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளது.

Categories

Tech |