Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 14 வரை மலை ரயில் ரத்து… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!!!

ஊட்டி மலை ரயில் சேவை டிசம்பர் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று சுமார் மூன்று மணி நேரத்திற்கும் விடாமல் மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

அதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில் மீண்டும் மழை தொடர்வதால் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 14ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |