பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தர்மபுரியில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின்படி காவல்துறையினர் ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் பயணிகள் கொண்டு வந்த பொருட்களை சோதனை மேற்கொண்டனர். இதேபோன்று ரயில் நிலைய பிளாட்பாரங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தர்மபுரி வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயில் பயணிகள் கொண்டு சென்ற பொருட்கள், உடைமைகள் போன்றவை சோதனை செய்யப்பட்டது. தர்மபுரி ரயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மாரண்டஅள்ளி முதல் ஓமலூர் வரை உள்ள ரயில் தண்டவாள பகுதிகளிலும் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகள் 2 நாட்களுக்கு தொடரும் என்று ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.