தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் அரசு பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்று அரசு சார்பாக தகவல் வெளிவந்தது. கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்றை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுகள் எதையும் நடத்தவில்லை. இந்த தேர்வுகளை ஏராளமானோர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்து இயல்பு நிலைக்கு வருகிறது.
எனினும் இதுவரை தேர்வு குறித்த எந்தவித அறிவிப்பையும் டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் வெளியிடவில்லை என்று பல்வேறு தரப்பில் கேள்வி பெறப்பட்டது. அதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தமிழக அரசு தமிழ் மொழிப்பாடத்தை கட்டாயம் என்று அரசாணை வெளியிட்ட பிறகே தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தது. இந்நிலையில் தமிழக அரசு தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்று அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி மற்றும் மனிதவளம் மேம்பாட்டுத்துறை அமைச்சரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது “தமிழகத்தில் அரசுப் பணிகளில் 10 முதல் 15 லட்சம் பணியாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதுவரையிலும் 10 லட்சத்திற்கும் குறைவானவர்களே அரசுப் பணியில் இருந்து வருகின்றனர். ஆகவே மீதமுள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு போதிய நிதி அரசிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு 2 வருடம் வயது வரம்பு 2 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஓரிரு தினங்களில் தேர்வுக்கான அறிவிப்பு தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.