இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது .இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150 ரன்கள் குவித்தார் .நியூசிலாந்து அணி தரப்பில் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட் கைப்பற்றி அசத்தினார் .இதன் பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 62 சுருண்டது. இதில் இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும் , முகமது சிராஜ் 3 விக்கெட்டும் மற்றும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டும் கைப்பற்றி அசத்தினார் . இதில் இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையில் இருந்தாலும் பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியது .
இதனால் 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்தது .இதில் புஜாரா 29 ரன்னும் , மயங்க் அகர்வால் 38 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இதனிடையே இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது .இதில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் அரைசதம் அடித்தார் .இதன் பிறகு தொடர்ந்து விளையாடிய அவர் 62 ரன்னில் ஆட்டமிழந்தார் .அடுத்ததாக புஜாரா 47 ரன்னும் , ஷுப்மான் கில் 47 ரன்னும், விராட் கோலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 41 ரன்கள் குவிக்க இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டும், ரவீந்திரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர் .
இந்திய அணி 2-வது இன்னிங்ஸையும் சேர்த்து மொத்தமாக 539 ரன்கள் முன்னிலையில் உள்ளது .இதனால் 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது .இதில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 60 ரன்கள் குவித்தார் .இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இதனிடையே நியூசிலாந்து அணி வெற்றி பெற 400 ரன்கள் தேவைப்படுகிறது அதேசமயம் கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் பாக்கி இருப்பதால் தற்போதைய நிலையில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.