Categories
மாநில செய்திகள்

சென்னை முழுவதும் விரைவில் முடிக்க…. நெடுஞ்சாலைத்துறைக்கு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகள் எங்கும் நீர் தேங்கி சேதமாகியது. அந்த வகையில் சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதனையடுத்து முதற்கட்டமாக சாலையில் தேங்கிய மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரே வேலு சென்னை முழுவதும் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிடும் பணியை நவீன தொழில்நுட்பத்துடன் உதவியுடன் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |