Categories
மாநில செய்திகள்

மக்களே! தமிழகத்தில் மீண்டும் தியேட்டர்கள் மூடல்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செய்தித்துறை மற்றும் திரைப்பட தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் சாமிநாதன், திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்கவும்,  அதனை குறைப்பதற்கான நடவடிக்கையாக செயலியை தயாரிக்கும் பணி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒமைக்ரான் பரவல் குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையினர்கள் மற்றும் வல்லுநர்களிடம் கலந்து பேசி திரையரங்குகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பதை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |