Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்து இதே நாள் வரும்போது…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமை இருக்காது…. புகழேந்தி சாடல்….!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை ஒட்டி மெரினாவில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி அஞ்சலி செலுத்தினார் கட்சியில். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  கட்சியில் எதற்காக தேர்தல்? எவ்வளவு பணம் கட்ட வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பதை அறிவிக்காமல் கட்சியின் தொண்டர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும்.. தேர்தல் வெளிப்படையாக நடக்கவேண்டும் என்று கூறியும், எதையும் வெளிப்படையாக அறிவிக்காமல் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தால் அடிதான் விழுந்தது.

அதிமுக தொண்டர்களை தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் அதிகாரத்தின் உச்சியில் இருந்து கொண்டு செயல்படுகிறார்கள். அடுத்த ஜெயலலிதா நினைவு தினம் வரும் பொழுது இந்த தலைமையில் அதிமுக செயல்படாது என்பதை இந்த நினைவிடத்தில் உறுதிமொழியாக தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |