கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அம்பலசேரி பகுதியில் ஜேசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்னமரியாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கணவன் இறந்து விட்டதால் அன்னமரியாள் தனது மகள் குருசம்மாள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அன்ன மரியாள் அதன் பின் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனையடுத்து அன்னமரியாளை அவரது உறவினர்கள் தேடிய போது அவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல்துறையினர் அன்னமரியாளின் உடலை உடனடியாக கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அன்னமரியாள் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.