Categories
அரசியல்

நம்மை அழிக்க பகல் கனவு காண்போரின்…. சதிவலையை அறுப்போம்…. ஓபிஎஸ் உறுதிமொழி…!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக நிர்வாகிகள் அவரோடு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது  “தீயசக்தி தீண்டாமல், தமிழ்நாடு தலைநிமிர உறுதி ஏற்கிறோம்.  அம்மா தந்த அழகான தமிழ் நாடு, வளமான தமிழ்நாடு,  கொலையில்லை கொள்ளை இல்லை , மக்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.  அதை மீண்டும் அமைப்பதற்கு,  ஓய்வின்றி உழைப்பதற்கு  உறுதியேற்கிறோம்.  நம் கழகத்தை அழித்திடலாம் என, பகல்கனவு காண்போரின் சதிவலையை அறுத்தெறிவோம் என உறுதி ஏற்கிறோம்!” என்று அவர் முன்மொழிய அனைவரும் வழிமொழிந்தனர்.

Categories

Tech |