Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டம்…. பணிமனையில் ஏற்பட்ட பரபரப்பு….!!

கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் அரசு பணிமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கம்பத்தில் உள்ள 2வது பணிமனையின் மேலாளர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் வழித்தடத்தில் பல்வேறு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஓட்டுநர்களை வேறு வழித்தடத்தில் மாற்றியது குறித்தும், அதே வழித்தடத்தில் தொமுச தொழிற்சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்களுக்கு பணி வழங்கியதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற போக்குவரத்து கழக திண்டுக்கல் கோட்ட மேலாளர் சரவணன், அறிவானந்தம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று  தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் தொழிற்சங்க மாநில நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படுவதாக கூறிய பின்னரே தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |