உகாண்டா நாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர்.
ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு பகுதியில் உகாண்டா நாடு அமைந்துள்ளது. அந்நாட்டில் தற்போது பருவமழை காலம் என்பதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.இந்நிலையில், அந்நாட்டின் பண்டிபுஹ்யா மாவட்டத்தில் இன்று பெய்த கனமழை காரணமாக திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.இதில் பலர் அடித்து செல்லப்பட்டனர் .மீட்புக்குழுவினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் உடல்களை மீட்டனர். மேலும், சிலர் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாத்த காவல்துறை தொடர்ந்து முயன்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் சிரொன்கோ மற்றும் புடுடா மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்