Categories
அரசியல் மாநில செய்திகள்

கலவரம் வரணும்னு…. திமுக அரசு இப்படி பண்ணிட்டு…. ஜெயக்குமார் வேதனை…!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு திரும்பிய போது எடப்பாடி பழனிச்சாமி சென்ற கார் மீது யாரோ ஒருவர் செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிடிவி தினகரன் தூண்டுதலின் காரணமாக அமமுகவினர் தாக்குதல் நடத்தியதாகவும், இரும்பு, கத்தி, கம்பு போன்ற ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏற்கனவே நாங்கள் முறைப்படி காவல்துறையிடம் அனுமதி வாங்கிவிட்டோம். ஆனால் நாங்கள் முழுவதுமாக வெளியேறுவதற்கு முன்பாக அமமுகவினரை போலீசார் உள்ளே அனுமதித்து விட்டனர். கலவரம் வர வேண்டுமென்றே திமுக இப்படி செய்து விட்டது. திமுக இப்படி செய்தது என்றால் காவல்துறையினரும் துணை போயிருப்பது வேதனையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |