வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களில் இதுவரை ஏழு பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “நான்கு நாட்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 4 பேர் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆப் மருத்துவமனையிலும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் நாகர்கோயில் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர்களில் இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த பெண்ணுக்கு தொற்று நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. இவர்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஒமைக்ரான் தொற்றா? என்பதை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.