சென்னையை தொடர்ந்து, மதுரையிலும் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 1 மாத காலமாக வட கிழக்கு பருவ மழை கொட்டி தீர்த்தது. பல ஊர்களில் குடியிருப்புகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து, விளை பொருட்கள் நாசமடைந்தன. இதனால் சென்னையில் காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டது.
குறிப்பாக தக்காளி 1 கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஓரளவு தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. சென்னையை தொடர்ந்து, தற்போது மதுரையிலும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மதுரை சந்தையில் 1 கிலோ தக்காளி மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றின் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. மழை குறைந்தாலும் பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால், காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் கேரட் பீன்ஸ் முருங்கைக்காய் உள்ளிட்ட காய்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.