கொரோனா தொற்று காரணமாக ஏராளமானோருக்கு, கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதனால் பலரும் தங்களுடைய பிஎஃப் பணத்தை எடுத்து வருகின்றனர். மேலும் வட்டி பணமும் அரசு தரப்பிலிருந்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அவை என்னவென்றால், 2020-21 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டியை 8.5% வைத்திருக்க EPFO முடிவு செய்திருந்தது. மேலும் இந்த வட்டி பணத்தை உடனே வழங்க வேண்டும் என்று ஜூன் மாதத்திலேயே தகவல் வெளியாகியது.
கொரோனா காலகட்டத்தில் மக்கள் நிதி நெருக்கடியில் இருப்பதை புரிந்து கொண்ட மத்திய அரசு, இந்த முடிவை மேற்கொண்டது. மேலும் 2019-20 நிதியாண்டிற்கான பிஎஃப் வட்டி பணத்தை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் 10 மாதங்கள் வரை காத்திருந்த நிலையில், 2020-21 நிதியாண்டுக்கான வட்டி பணம் விரைவாக கிடைப்பது பிஎப் சந்தாதாரர்களினிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சந்தாதாரர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கில் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்று வீட்டிலிருந்தே பார்க்கலாம்.
எவ்வாறென்றால், பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து ஒரு மிஸ்டுகால் கொடுத்தாலே போதும்.011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் பிஎஃப் பேலன்ஸ் குறித்த விபரங்கள் உங்களுக்கு வரும். இந்த சேவைக்கு எந்தவித கட்டணமும் கிடையாது. மேலும் எஸ்எம்எஸ் மூலமாகவும் நீங்கள் பேலன்ஸ் பார்க்கலாம் பிஎஃப் கணக்குடன் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணிற்கு EPFOHO UAN ENG என டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். மேலும் பல்வேறு மொழிகளிலும் நீங்கள் பேலன்ஸ் பார்க்க முடியும்.