Categories
மாநில செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை….. என்ன காரணம்…? தொடரும் விசாரணை….!!!

காவேரிப்பாக்கம் அருகே கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சுப்பண்ணா முதலியார் பகுதியில் வசித்து வரும் ராமலிங்கம் மற்றும் அவரின் மனைவி அனுராதா, மகன் பரத் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற காவேரிப்பாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக மூவரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |