Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உருவாகும் சிறுவர்களின் சேட்டை …!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் கவனத்தை திசை திருப்பி அவரிடம் இருந்த 1லட்சம் ரூபாயை இரண்டு சிறுவர்கள் சேர்ந்து திருடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.

 

வாணியம்பாடி பேரூந்துநிலையம் அருகே கனரா வங்கியில் 1லட்சத்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு பாத்திமா என்ற பெண் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார் .அப்போது வங்கியில் இருந்தே பின் தொடர்ந்து வந்த இரு சிறுவர்கள் அந்தப்பெண்ணிடம் உடையில் கறை படிந்திருப்பதாக கூறி அவர் பின்னால் திரும்பிய பொது கைப்பையை பறித்து தப்பி ஓடினர் .இதனை அடுத்து வாணியம்பாடி காவல் துறையினர் அப்பகுதியில் பதிவாகி உள்ள சி.சி.டி.வி அடிப்படையாகக் கொண்டு இருவரையும் தேடிவருகின்றனர் .இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Categories

Tech |