தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு குரூப் 1, குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு உதவி செய்யும் வகையில் தமிழகத்தின் தலை சிறந்த பயிற்சி மையம் ஆக்டர் அகாடமி தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 4 வீஏஓ தேர்வுகளுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதால் தேர்வர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற தேர்வுகளுக்கு பின்பு நீண்ட காலமாகியும் அடுத்த அறிவிப்பு இன்னும் வெளியாகாததால் எப்போது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அனைவரும் ஆர்வமாக காத்துள்ளனர்.
இதனால் விரைவில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தேர்வுகளுக்கு பயிற்சி செய்து வருபவருக்கு உதவி செய்யும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரி தேர்வுகள் இன்று காலை நடைபெற உள்ளது.