Categories
மாநில செய்திகள்

பார்வையற்றவர்களுக்காக…. பிரத்தியேகமாக வெளியான முதல் நூல்… இனி இவங்களும் படிக்கலாம்….!!!

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான பிரெய்லி வடிவிலான முதல் கவிதை நூல் வெளியாகியுள்ளது

என்னதான் டிஜிட்டல் உலகம் அதிவேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும், கையில் புத்தகத்தை வைத்து படிப்பது என்பது ஒரு தனி அனுபவம். அதுவே நல்ல வாசிப்பாளர்களின் பலரது தேர்வாக இன்றளவும் உள்ளது. நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த விழாவில் மதன் எஸ் ராஜா என்பவர் கசடு எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். எழுத்தாளரா லதா என்பவரின் ‘நோ ராப் இம்ப்ரின்ட்ஸ் பதிப்பகம்’ மூலமாக இந்நூல் வெளியிடப்பட்டது.

பார்வை குறைபாடு உள்ளவர்கள் வாசிக்க வசதியாக பிரெய்லி வடிவத்திலும் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு உள்ள அனைவரும் வாசிப்பதற்கு ஏதுவாக இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் ஒரு கவிதை நூல் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் பிரெய்லி  வடிவில் வெளியாகி இருப்பது இதுவே முதன்முறை. இந்த நல்ல முயற்சியின் மூலம் பார்வை குறைபாடு உள்ளவர்களும் இனி நல்ல இலக்கியங்களை படித்து தெரிந்து கொள்ள முடியும்.

Categories

Tech |