இந்தியாவின்பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ தன்னுடைய வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சுயமாக தொழில் தொடங்குவதற்கு முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரையில் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விவசாயம் தொடர்புடைய தொழிலுக்கு கடன் கிடைக்காது. புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மட்டுமே இந்த திட்டம் பயனளிக்கும்.
இதற்காக நீங்கள் எந்த ஒரு வங்கியிலும் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கு அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று, புகைப்படம், இயந்திரம் மற்றும் இதர வாகனங்கள் வாங்குவதற்கான ரசீது, தொழிற்சாலை இருக்கும் இடம் ஆகிய விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு இரண்டு நிபந்தனைகள் இருக்கின்றன. அதன்படி எஸ்பிஐ வங்கியில் 6 மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.
இரண்டாவதாக தொழில் தொடங்க விரும்பும் விண்ணப்பதாரர் சிறுகுறு தொழில் முனைவோராக இருக்க வேண்டும். இந்தக் கடனைப் பெற நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க https://emudra.sbi.co.in:8044/emudra என்ற முகவரியில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். சுயமாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த திட்டம் நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும்.