தமிழகத்தில் 10 மாவட்டங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகளை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக சட்டப்பேரவையில் 2021-22ஆம் ஆண்டு காண வரவு செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் நலன் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் தொழிலாளர் நலன் அமைச்சர் கயல்விழி அத்துறையின் மீதான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பழங்குடியினர் நலத்துறை சார்பில் 318 உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கி வருகின்றது. தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 14 தொடக்கப் பள்ளிகள், 11 நடுநிலைப் பள்ளிகள், 5 உயர்நிலைப் பள்ளிகள், 9 மேல்நிலைப் பள்ளிகள் என்று 39 உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளிகளுக்கு மொத்தம் 21.13 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகளை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் வகுப்பறை, சுற்றுச்சுவர், கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து அதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.