Categories
மாநில செய்திகள்

ALERT: தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட மக்களே…. இன்று மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வந்தது. இதற்கிடையில் மழை அளவு சற்றுக் குறைந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |