சுவையா தஞ்சாவூர் மைதா மாவு பரோட்டா செய்யும் முறை
தேவையானபொருள்கள் ;
● மைதா மூன்று டம்ளர்
● உப்பு ஒரு தேக்கரண்டி
● ஒரு சிட்டிகை சோடா மாவு
● டால்டா 3 மேசைக்கரண்டி
● வெங்காயத்தாள் ஒரு கைப்பிடி
● சர்க்கரை 3 தேக்கரண்டி
செய்முறை;
மைதா வில் சோடா உப்பு சேர்த்து கலக்கி டால்டாவை ஊற்றி தண்ணீர் ஊற்றி ஒரு போர் கால் கிளறிவிட வேண்டும். போர் கால் கிளறி விடுவதால் பிசையும் போது கையில் ஒட்டிக் கொண்டே வராது. சிறிது நேரம் கழித்து கையில் எண்ணை தொட்டு கொண்டு நன்கு பிசையவும் தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தெளித்து பிசையவும் ப பிசைந்த மாவை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நமக்கு தேவையான அளவு உருண்டை போட்டு எல்லா உருண்டைகளையும் எண்ணை தடவி நன்கு ஊற விட வேண்டும் .(இரண்டு மணி நேரம் போதுமானது ஆகும்) மேலும்ஊறவிட்டல் நன்றாக இருக்கும் ஒவ்வொரு உருண்டைகளையும் ரொட்டி பலகையில் தேய்த்து புடவைக்கு கொசுவம் வைத்து போல் மங்கி மறுபடி 20 நிமிடம் ஊறவைக்கவும் உடனே தேய்ப்பதால் சுருண்டு சுருண்டு இருக்கும் கொசுவம் வைத்து ஊட்டினாள் தேய்க்கும்போது சுலபமாக வரும் இப்போது தேய்க்க நன்றாக வரும் கடையில் உள்ள போல் கெட்டியாகவும் செய்யலாம்.அது சரியாக உள்ளே வேகாது வெள்ளையாக இருக்கும் ஆகையால் சிறிது பெரியதாக போட்டு உள்ளே ரெடி செய்த பரோட்டாவை தவாவில் போட்டு சுடவும் ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எண்ணெய் கலந்த டால்டாவை சுற்றி ஊற்றி சுட்டெடுக்கவும்
இப்போது சுவையான மைதா மாவு பரோட்டா ரெடி