Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா….? “அடித்து தீ வைத்து கொல்லப்பட்ட இலங்கையர்”…. பாகிஸ்தானில் பயங்கர சம்பவம்….!!

இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் பாகிஸ்தானில் சக ஊழியர்களால் தாக்கப்பட்டு தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் 124 பேரை கைது செய்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த தியவடனகெ நந்தஸ்ரீ பிரியன்தா என்பவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சியால்கோட் என்ற பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்றுமதி மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் சக ஊழியர்கள் தியவடனகெ நந்தஸ்ரீ பிரியன்தா-ஐ தாக்கியதோடு தீ வைத்து கொலை செய்துள்ளனர்.

மேலும் அவர் இஸ்லாமிய மதத்தை அவமதித்த காரணத்தால் தான் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே காவல்துறையினர் அந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 124 பேரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |