இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவ்ரவ் கங்குலி வெளியிட்ட அறிக்கையில். சிறந்த வீராங்கனைகளை உடைய ஏழு அணிகளை கொண்ட ஐ .பி .எல் போட்டி நடத்தலாம் என அறிவித்துள்ளார் .
மகளிருக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என நீண்ட நாட்களாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது . கடந்த வருடம் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக பல நாட்டு வீராங்கனைகள் பங்குபெற்ற இருபது ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இந்நிலையில் மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘மகளிருக்கான ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். போட்டியை நடத்துவதற்கு நிறைய வீராங்கனைகள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். எனவே அடுத்த நாலு வருடங்களில் சிறந்த வீராங்கனைகளை உடைய ஏழு அணிகளை கொண்ட பெண்கள் ஐ.பி.எல். போட்டி நடத்தலாம் என அறிவித்துள்ளார் .