11 பெண்களை பாலியல் ரீதியான வன்கொடுமை செய்த தன்னுடைய சகோதரரை காப்பாற்ற நினைத்த நிகழ்ச்சி தொகுப்பாளரை அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தின் ஆளுநராக கடந்த 2011 முதல் ஆண்ட்ரூஸ் என்பவர் இறந்துள்ளார். இவர் சுமார் 11 பெண்களை பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாக நியூயார்க் நகரத்தின் வழக்கறிஞர் ஒருவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து ஆண்ட்ரூஸ் தன்னுடைய ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனையடுத்து தன்னுடைய சகோதரரை பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து காப்பாற்றுவதற்காக ஆளுநர் அலுவலகத்திலுள்ள பணியாளர்களுக்கு முக்கிய தகவல்களை பரிமாறியதாக அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான சி.என்.என் நிறுவனத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளரின் மீது புகார் எழுந்துள்ளது.
அந்தப் புகாரை விசாரணை செய்த சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனம் தனது சகோதரரை காப்பாற்ற நினைத்து ஆளுநர் அலுவலகத்திலுள்ள பணியாளர்களுக்கு முக்கிய தகவல்களை பரிமாறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்துள்ளது.