Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvNZ…. 372 ரன்கள் வித்தியாசத்தில்…. இந்திய அணி வெற்றி…. தொடரை வென்று முதலிடம்!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது.. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி 150 ரன்கள் எடுத்தார். அதே போல மற்றொரு துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்..  புஜாரா, கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்..

இறுதியாக அக்ஷர் பட்டேல் 52 ரன்கள் எடுத்தார்.. இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்தது.. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்..

இதனையடுத்து நியூசிலாந்து அணி களம் இறங்கியது.. அந்த அணி இந்திய வீரர்கள் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்தது.. அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டும் எடுத்தனர்..

பின்னர் 2-வது இன்னிங்சில் இந்திய அணி களம் இறங்கியது.. முதல் இன்னிங்சை போலவே சிறப்பாக ஆடிய மயங் அகர்வால் 62 ரன்கள் எடுத்தார்.. மேலும் புஜாரா மற்றும் சுப்மன் கில் இருவரும் 47 ரன்களும், விராட் கோலி 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.. அக்சர் பட்டேல் 41 ரன்களும் எடுத்து களத்தில் இருக்க, இந்திய அணி 7 விக்கெட் இழந்து 276 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.. நியூசி தரப்பில் அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்..

இதையடுத்து 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கியது.. நியூசிலாந்து அணியால் 167 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது..
அதிகபட்சமாக டேரி மிட்செல் 60 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 44 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஜெயந்த் யாதவ், அஸ்வின் தலா 4, அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனால் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது..

2012 ஆம் ஆண்டு முதல் இந்திய மண்ணில் 14 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று  14 தொடரையும் வென்று அசத்தியுள்ளது இந்திய அணி.. இந்த வெற்றியின் மூலம் ஐசிசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

Categories

Tech |