தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தததையடுத்த மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்காக முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் தமிழகத்தில் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் 25 க்கு 8 செடிகள் அடங்கிய ஊட்டச்சத்து தளைகளை முதல்வர் வழங்கினார். மேலும் ஊரகப் பகுதிகளில் காய்கறி தோட்டம் அமைக்க ரூபாய் 15 க்கு இரண்டு வகை காய்கறி விதை தளைகளையும் வழங்கியுள்ளார்