Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏமாற்றிய காதலன்…. முகத்தில் ஆசிட் வீசிய திருமணமான பெண்…. கோவையில் பரபரப்பு…!!

ஏமாற்றிய காதலன் மீது பெண் ஆசிட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகேஷ் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள மசாஜ் சென்டரில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதே மசாஜ் சென்டரில் வேலை பார்த்த மீனம்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கும், ராகேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜெயந்திக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயந்தி கணவரை விட்டு பிரிந்து துபாயில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ராகேஷும், ஜெயந்தியும் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர். இதனையடுத்து ராகேஷின் தங்கை திருமணத்திற்காக ஒரு சில மாதங்களுக்கு முன்பு 2 பேரும் துபாயிலிருந்து இந்தியா வந்துள்ளனர். அதன் பிறகு இரண்டு பேரும் நேரில் சந்திக்காமல் செல்போனில் மட்டும் பேசிக்கொண்டிருந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் ராகேஷுக்கு திருமணம் நடந்துள்ளது. அதன் பிறகு வேலை செய்வதற்காக ராகேஷ் கோவைக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து தனது திருமண புகைப்படங்களை ராகேஷ் வாட்ஸ்அப் மூலம் ஜெயந்திக்கு அனுப்பியுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதன்பிறகு ஜெயந்தியின் வற்புறுத்தலின் காரணமாக ராகேஷ் அவரை சந்தித்துள்ளார். இதனையடுத்து துபாயில் இருக்கும் போது நீ என்னை தானே திருமணம் செய்து கொள்வதாக கூறினாய் என ஜெயந்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த ஜெயந்தி தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ராகேஷின் முகத்தில் வீசி விட்டு,  கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த ராகேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதற்கிடையில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து ஜெயந்தியும் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்றுள்ளார். அதன்பின் அருகில் உள்ளவர்கள் ஜெயந்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |