Categories
மாநில செய்திகள்

“செம கெத்து காட்டிய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு”…. குவியும் பாராட்டு….!!!

குழந்தைப்பருவ புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு மிக முக்கியத்துவம் வாய்ந்த செயல் ஒன்றை செய்துள்ளார். இதற்கு அனைவரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன.

குழந்தைப்பருவ புற்றுநோய்க்கான சிகிச்சை மீது விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு ஆதரவாக நிதி திரட்டுவதற்காக உருவாக்கப்பட்டது அப்போலோ டி2டி. இது பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டி வருகிறது.இந்த நிதியானது அப்போலோ புற்றுநோய் மருத்துவர்கள் குழுவால் உரிய முறையில் பயன்படுத்தப்படுகிறது. இளம் புற்றுநோயாளிகள் உயிர் வாழ வழி செய்கிறது. இந்நிலையில் அப்போலோ புற்றுநோய் மையம் மற்றும் நெவில்லே எண்டீவர்ஸ் பவுண்டேஷன் இணைந்து விழிப்புணர்வு மராத்தான் ஒன்று நடைபெற்றது.

இதில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டார். அப்பலோ புரோட்டான் சென்டரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மீண்டும் அதே இடத்தை வந்தடைந்தார். இவர் கடந்த மொத்த தூரம் 120 கிலோமீட்டர் ஆகும். இந்த செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில் நாளுக்கு நாள் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை வாழ்க்கையின் ஒரு வழிமுறையாக முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவரைப் பற்றி கூற வேண்டும் என்றால் மிகவும் மிரட்டலான பின்புலத்தை கொண்டவர். வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையில் ஐஜியாக இருந்தவர். சென்னை காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக செயல்பட்டார். 2015 சென்னை வெள்ளத்தின் போது நேரடியாக களத்தில் இறங்கி பல பொது மக்களை மீட்டார். இவரது தலைமையில் கடலோர பாதுகாப்பு குழுமம் புதிய பலம் பெற்றது. அதுமட்டுமில்லாமல் குடியரசுத் தலைவரின் பதக்கம், பாரத பிரதமரின் பதக்கம், முதல்வர் பதக்கம் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார்.

Categories

Tech |