Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கும் தொழிலாளியான லலித் குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லலித்குமார் சிறுமியை வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளார்.

அதன் பிறகு இருவரும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லலித் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |