தமிழகத்தில் சமீப காலமாகவே பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பெண் குழந்தைகள் மீது பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அடுத்தடுத்து பாலியல் குற்றங்கள் தொடர்ந்து தமிழகத்தில் அரங்கேறி கொண்டு வருகின்றன. இந்த நிலையில் புகார் கொடுக்க வந்த செவிலியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய வைத்த வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் பளுகல் காவல் நிலையத்தில் மோசடி புகார் அளிக்க வந்த செவிலியர் ஒருவருக்கு ஆதரவளிப்பதாக கூறி காவல்துறை ஆய்வாளர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பாலியல் குற்றங்கள் எப்பொழுது நிறுத்தப்படும் என்ற கலக்கத்தில் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.