Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. பொங்கல் பரிசாக ரூ.3000…. தேமுதிக தீர்மானம்…!!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசு தொகுப்பாக கரும்பு, மளிகை பொருள்கள், ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.

இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படுமா? என்பது குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தேமுதிக சார்பாக நடைபெற்ற தேமுதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தைப்பொங்கலுக்கு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |